கொரோனா வைரஸ் தொற்று, காற்றின் மூலமாகவும் பரவலாம்

 




கொரோனா வைரஸ் தொற்று காற்றின் மூலமாகவும் பரவலாம் என அமெரிக்க நோய் தடுப்பு மையம் (சிடிசி) தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவல் பற்றி அமெரிக்க நோய் தடுப்பு மையம் ஏற்கனவே இதேபோன்ற அறிக்கையை வெளியிட்டு பின் அதனை திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், சிடிசி வெளியிட்டுள்ள புதிய தகவலில் சமூக இடைவெளியை சரியாக பின்பற்றிய நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.