வெளிநாட்டினருக்கு கத்தாரில் சொத்துக்களை வைத்திருக்க அனுமதிபொருளாதாரத்தை பல்வகைப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வெளிநாட்டு நிதியை ஈர்க்க கட்டுப்பட்டு விதிகளை தளர்த்தி வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பல பகுதிகளில் ரியல் எஸ்டேட் வைத்திருக்க கத்தார் அனுமதிப்பதாக அறிவித்துள்ளது.

கத்தாரி அல்லாத நபர்கள் 9 பகுதிகளில் சொத்துக்களை கொள்வனவு செய்ய  முடியும், இதற்கு முன் இவ் எண்ணிக்கை 3 பகுதிகளாக தோஹாவில் உள்ள பேர்ல் தீவு (Pearl Qatar) திட்டத்தின் எல்லைக்குள் மட்டுமே ரியல் எஸ்டேட் உரிமையை  பெற அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

குடியிருப்பு வளாகங்கள் மற்றும் மால்களுக்குள் குடியிருப்பு அலகுகள் அல்லது வணிக அலகுகளின் உரிமையை பெற முடியும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறைந்தது 730,000 ரியால் (200,000 டாலர்) மதிப்புள்ள சொத்து உரிமையாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் வதிவிட உரிமையையும் வழங்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source : https://thepeninsulaqatar.com/article/06/10/2020/Qatar-allows-foreigners-to-own-properties-in-more-areas