இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் விமானங்கள் வரையறுக்கப்படும்

 


நாட்டில் திடீர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை காரணமாக  தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் மற்றும் மருத்துவமனைகளின் திறனை, இட வசதியை கருத்தில் கொண்டு வெளிநாட்டில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்குள் கொண்டு வரும் விமான சேவைகள் வரையறுக்கப்படும் என்று தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர்.சுதாஎல்த் சமரவீர தெரிவித்தார்.

ஏற்கனவே திட்டமிடப்பட்ட விமானங்கள் குறித்த திகதியில் இயக்கப்படும் என்றும், புதிய விமான சேவைகள்  வரையறுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.