இலங்கையில் வேகமாக பரவும் கொரோனா !

 


நாட்டை முழுவதுமாக சில மாதங்களுக்கு முடக்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கொரோனா பரவலானது கட்டுப்பாட்டை தொடர்ந்து கடைப்பிடிக்கத் தவறியதன் காரணமாக மின்னல் வேகத்தில் மீண்டும் நாடு பூராக பரவ ஆரம்பித்துள்ளது.

முதல் கட்டமாக கம்பஹா டிவிலுப்பிட்டியவில் ஆரம்பித்து குருநாகல், கொழும்பு அம்பாறை என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இன்று புதிதாக சீதுவையில் சற்று முன்னர் ஊரடங்கு சட்டம் பொலிசாரினால் அமுல்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து கம்பஹாவின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது.

சமூக இடைவெளிகளை பேணி சுகாதார மற்றும் பொலிஸ் ஊழியர்களின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதன் மூலம் மீண்டும் ஒரு முறை நாடு முடக்கப்படுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம்.