அனைவருக்கும் நாளை முதல் கத்தாரில் இலவச ஃப்ளு (flu) தடுப்பூசி

 


கத்தார்  பொது சுகாதார அமைச்சகம் (MoPH), ஆரம்ப சுகாதாரக் கழகம் (PHCC) மற்றும் ஹமாத் மருத்துவக் கழகம் (HMC) ஆகியவை இணைந்து தேசிய காய்ச்சல் தடுப்பூசி பிரச்சாரத்தை இன்று ஆரம்பித்துள்ளது.

இந்த தடுப்பூசி ஆறு மாதங்களுக்குமேற்பட்ட குழந்தை உட்பட அனைவருக்கும் பாதுகாப்பானது.

இவ் தடுப்பூசியானது பி.எச்.சி.சி சுகாதார மையங்களில் (Heath Center) அல்லது 40 க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரச மருத்துவ நிலையங்களில்  நாளை முதல் இலவசமாக கிடைக்கும்.

இந்த திட்டத்தில் மார்ச் 2021 வரை 500000 க்கும் அதிகமானவர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

COVID-19 குறித்த தேசிய சுகாதார மூலோபாயக் குழுவின் தலைவரும், ஹமாத் மருத்துவக் கழகத்தின் தொற்று நோய்களின் தலைவருமான டாக்டர் அப்துல்லாதீப் அல் கல், காய்ச்சல் தடுப்பூசியின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகையில், “கோவிட் மற்றும் காய்ச்சல் இரண்டும் ஒரே அறிகுறிகளைக் கொண்டுள்ளன மற்றும் காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸுடன் இணைந்திருப்பது கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும், எனவே இந்த ஆண்டு காய்ச்சல் தடுப்பூசி எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது" என்று குறிப்பிட்டுள்ளார்.