கத்தாரிலிருந்து உம்ரா பயணம் அடுத்த மாதம் ஆரம்பம் !

 
சவுதி கத்தாருக்கான தனது எல்லைகளை மீள திறந்துள்ளதால், வரவிருக்கும் உம்ரா மற்றும் ஹஜ் பருவ காலங்களில் அல்லாஹ்வை வணங்க வரும் அடியாளர்களுக்கு சேவை செய்ய சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக பல ஹஜ் மற்றும் உம்ரா ஏற்பாட்டாளர்கள் சந்தோசம் தெரிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 4 வருட முற்றுகையின் பின்னர் உம்ரா பிரச்சாரகர்களுக்கு வசதியாக தோஹாவில் அலுவலகங்களைத் திறப்பதற்கும்,  பிரச்சாரகர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதற்கும் தயார் நிலையில் உள்ளதாகவும் மேலும் அவர்கள் தெரிவித்துள்ளனர் .

மேலும் அவர்கள் கூறுகையில் 'சில விஷயங்களை தெளிவுபடுத்த காத்திருக்கிறோம், குறிப்பாக கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் அதனுடன் இணைந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் சவுதி மற்றும் கத்தாருக்கு இடையில் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பதாகும். இது 20-25 நாட்களுக்கிடையில் உத்தியோகபூர்வமாக அதிகாரிகளால் அறிவிக்கப்படும்.

Source : wgoqatar