இலங்கைக்கு வரும் அனைத்து இலங்கை மற்றும் வெளிநாட்டு பயணிகளும் முன் ஒப்புதல் பெற வேண்டும்

இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL) இலங்கைக்கு வரும் அனைத்து இலங்கை மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்குமான பின்பற்ற வேண்டிய மேலதிக நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.இலங்கைக்குள் நுழைய அனைத்து பயணிகளும் வெளியுறவு அமைச்சகம் அல்லது அந்தந்த நாடுகளுக்கான இலங்கை காரியாலயத்தில் முன் ஒப்புதல் பெற வேண்டும் என்று ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2021 ஜனவரி 6 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பயணிகளின் ஒப்புதல்களுக்கான பிரத்யேக மின்னஞ்சல் முகவரி மற்றும் அனைத்து ஒப்புதல்களும் இந்த மின்னஞ்சல் முகவரி மூலம் கையாளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து அத்தகைய அங்கீகரிக்கப்பட்ட பயணிகளுக்கு டிக்கெட் வழங்க அந்தந்த விமான நிறுவனத்திற்கு இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தினால் கோரிக்கை அனுப்பப்படும்.

EMAIL ADDRESS : caaslpax@caa.lk

பயணிகளின் ஒப்புதலுக்காக வேறு எந்த அதிகாரியின் அஞ்சல் முகவரியையும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அனைத்து பயணிகளையும் CAASL கேட்டுக்கொண்டுள்ளது.