பதவி ஏற்க முன்னர் நாடு முழுவதும் ஆயுதப் போராட்டங்கள்...

 
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்க முன்னர் நாடு முழுவதும் ஆயுதப் போராட்டங்கள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அமெரிக்க புலனாய்வுப் பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் நேற்று (12) செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் எதிர்வரும் 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.

அந்தப் பின்னணியில் அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் ஆயுதப் போராட்டங்களை நடத்துவற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு எச்சரித்துள்ளது.

தான் பதவியேற்பதற்கு அச்சப்படவில்லை என ஜோ பைடன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.