இன்று மாலை முதல், கத்தாரின் தேசிய விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸ், சவுதி அரேபிய வான்வெளி வழியாக விமானங்களை மாற்றத் தொடங்கியது.
இதன் படி இன்று மாலை கத்தார் ஏர்வேஸ் சவுதி வான்வெளி வழியாக சில விமானங்களை மாற்றியமைக்கத் தொடங்கியது,
முதல் திட்டமிடப்பட்ட விமானம் QR 1365 ஆனது, டோஹாவிலிருந்து Johannesburg க்கு இன்று மாலை 8.45 மணிக்கு புறப்பட்டதாக விமான நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.
2017 ஆம் ஆண்டிக்கு பிறகு சவூதி வான் வழியாக பறக்கும் முதல் விமானம் இதுவென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த செவ்வாயன்று அல்-உலா ஒப்பந்தத்தின் பின்னர், கத்தார் உடனான அனைத்து உறவுகள் மற்றும் வான், நிலம் மற்றும் கடல் எல்லையை மீண்டும் திறப்பதற்காக சவூதி மற்றும் அதன் கூட்டு நாடுகள் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.