சிங்களவர்களை வைத்து ஜனாஸா எரிப்பை நிறுத்தும் திட்டம் ஆரம்பம் .. (ஆதரவு வழங்குங்கள் )

 
நேற்று முன்தினம் சுமார் 300 Km தூரமுடைய ஒரு பிரயாணம் சென்றிருந்தோம்.

தேனீர் குடிப்பதற்காகவும் உணவுக்காகவும் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தோரின் கடைகளிலேயே நிறுத்தினோம்.
அவற்றின் உரிமையாளர்களும் சேவையாளர்களும் எம்முடன் நடந்து கொண்ட விதம் மிகவும் வித்தியாசமாய் இருந்தது.
ஈஸ்தருக்கு பிறகு முஸ்லிம்கள் மீது அனுதாபத்துடன் சிங்கள சகோதரங்கள் நடந்து கொள்வதை காணும் போது மிகவும் ஆறுதலாய் இருந்தது.
புதிய நம்பிக்கையும் துளிர்விடுகின்றது.
பச்சிளம் குழந்தை உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஜனாஸா எரிப்பு அவர்களின் இதயங்களிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை அவர்களின் செயற்பாடுகளில் அவதானிக்க முடிந்தது.
எல்லை மீறி கொடூரமாக முஸ்லிம் சமூகம் தண்டிக்கப்பட்டுக்கொண்டிருப்பதாக சாதாரண சிங்கள மக்கள் உணரத்தொடங்கி விட்டதாக உறுதியாக சொல்லக்கூடிய அளவுக்கு அவர்களின் அணுகு முறைகள் அமைந்திருந்தன.
நாமோ அவர்களோ ஜனாஸா எரிப்பு விடையமாக ஒரு வார்த்தையேனும் பேசவில்லை.
ஆனால் அவர்களின் புதிய பரிவும் கரிசனையும் ஈஸ்தருக்கு முந்திய காலத்தை நினைவுபடுத்தின.
ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டது போலவே ஈஸ்தர் காரணமாக ஏற்பட்ட முஸ்லிம்கள் மீதான வெறுப்பும் கோபமும் எரிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
முறையான ஒரு செயற்திட்டத்தை முன்னெடுத்தால் பல இலட்சம் சிங்கள உறவுகள் வீதிக்கு இறங்கி எமது ஜனாஸாக்களை அடக்கும் உரிமையை வழங்குமாறு கோசமிடுவார்கள் என்று எனக்கு நம்பிக்கையுண்டு.
இன்ஷா அழ்ழாஹ் விரைவில் அதற்கான ஒரு களப்பணியை முன்னெடுக்க தயாராகிக்கொண்டிருக்கின்றேன்.
சிங்கள சகோதரங்களைக்கொண்டுதான் ஜனாஸா அடக்கத்துக்கான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்துள்ளேன்.
இன்ஷா அழ்ழாஹ் விரைவில் சிங்கள உறவுகளின் ஆதரவுக்குரல் கிராமங்களிலும் நகரங்களில் உரத்துக்கேட்கும்.
சிங்கள பகுதிகளூடாக என்னுடன் சேர்ந்து பாதயாத்திரை செய்ய தயாரான 35வயதுக்கு மேற்பட்ட இருவர் தொடர்பு கொள்ளுங்கள்.
ஓரளவேனும் சிங்கள மொழியில் பேசக்கூடியவர்களாய் இருந்தால் மிக்க நல்லது.
ஊடகச்சலசலப்பு இல்லாமல் உள்ளங்களுடன் பேசும் மூவர்கள் மட்டுமே பங்குபற்றும் பாதயாத்திரையது.
கால நேரங்களை ஆலோசிப்போம்
விருப்பத்தை மட்டும் அறியத்தாருங்கள்.
உறங்கிக்கொண்டு உரிமைகளை பெறமுடியாது உயிர்ப்புடன் முயன்றால் நிட்சயம் நலவு கிட்டும்
-வஃபா பாறுக்-